கோடிக்கணக்கான ரசிகர்களை வைத்து தல அஜித் யாருக்கு ரசிகர் தெரியுமா? அவரே சொன்ன வார்த்தை

அஜித் அனைவருக்கும் பிடித்த ஒரு நடிகர். எல்லோரிடமும் அன்பு காட்டும் நல்ல பண்பாளர் என அவரை புகழ்பவர்கள் அதிகம். சினிமாவில் மட்டுமல்ல சமூகத்தில் அவரின் மீதான நன்மதிப்பு அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் அவர் வாழ்ந்து வருகிறார். தொழில், விளையாட்டு, விமான கண்டுபிடிப்பு, விளையாட்டு என தன் பார்வைகளை அதை நோக்கி செலுத்தி வருகிறார்.

அவருக்கு உலகளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அண்மையில் அவரை நீச்சல் வீரர் குற்றாலீஸ்வரன் சந்தித்தார். அப்போது அஜித் அவரிடம் நான் உங்கள் ரசிகன் என கூறியுள்ளார்.

இது குறித்து குற்றலீஸ்வரன் இது கற்பனைக்கு எட்டாத சந்திப்பு. அஜித்தின் எளிமையும், விளையாட்டு துறையில் அவருக்கு இருக்கும் ஆர்வத்தையும் அறிந்து கொண்டு ஆச்சர்யப்பட்டேன் என ட்விட்டரில் கூறியுள்ளார்.