‘தளபதி 64’ படத்தில் கைரா அத்வானி, கபீர்சிங் உள்பட ஒருசில நட்சத்திரங்கள் நடிக்க வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தாலும் இன்றைய அப்டேட்டில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் குறித்த தகவல், படப்பிடிப்பு தொடங்கும் நாள் குறித்த தகவல் மற்றும் படத்தில் பணிபுரியும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

கார்த்தியின் ‘கைதி’ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள ‘தளபதி 64’ திரைப்படத்தை சேவியர் பிரிட்டோ தயாரிக்கவுள்ளார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது