பிக்பாஸ் வீட்டில் இன்று கஸ்தூரி எலிமினேட் செய்யப்பட்டார். இதனால் வீட்டில் இருந்து அவர் வெளியேறும் போது போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் வாழ்த்து கூறினார்.

அப்படி வாழ்த்து கூறிய போது, அவர் ஷெரீனிடம் நீ இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவாய், சாண்டி நீ டைட்டில் வின் பண்ணுவாய், தர்ஷனுக்கு வாய்ப்பு இருக்கிறது.

கவீனை விரைவில் வெளியில் பார்க்கலாம், லாஸ்லியா நீ இப்போது இருப்பது போல் எப்போதும் இரு என்று கூறினார்.

அனைவரும் சாண்டி, தர்ஷன், முகன், லாஸ்லியா அல்லது சேரன் இவர்களில் யாராவது தான் இருப்பார்கள் என்று நினைத்தனர். ஆனால் திடீரென்று கஸ்தூரி ஷெரீன் இறுதிப் போட்டிக்கு வருவார் என்று கூறியுள்ளார்.