பிக்பாஸ் வீட்டில் இன்று போட்டியாளர்கள் ஒவ்வொருவரையும் தனியாக அழைத்து இது போட்டி, ஒன்று பாசமலர் படம் இல்லை என்று அறிவுரை கூறினார்,

அப்படி முகினிடம், கமல் நீங்கள் முன்பு இப்போது பரவாயில்லை, ஆனால் அந்த நண்பர்கள் கூட்டத்தில் சேர்ந்து இப்போது முற்றிலும் போட்டி என்பதையே மறந்துவிட்டீர்களோ, அது மட்டுமின்றி அதிகமாக எமோஷனல் ஆகிறீர்கள் அதை எல்லாம் கட்டுப்படுத்தி கொள்ளுங்கள் என்று கூறினார்.

அப்போது முகன், நான் அதிகம் எமோசனல் ஆவது உண்மை தான் சார், ஆனால் என்ன செய்வது, எனக்கும் பல முறை தோன்றும் நாம் விளையாடத்தான் வந்திருக்கிறோம் என்று, ஆனால் தர்ஷன் ஒரு முறை நான் 19 வருடங்கள் வாழ்க்கையையே வாழவில்லை என்று கூறினான்.

அந்த ஒரு விசயமே எனக்கு அவன் ஜெயித்தால் போதும், அவன் டைட்டில் வின் பண்ணினால் போதும் என்று நினைத்தேன், அதைத தவிர இந்த வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் அண்ணன், தம்பி, சகோதரன், சகோதரி போன்று இருக்கிறோம்.

கொஞ்சம், கொஞ்சமாக அதிலிருந்து மீண்டு வருகிறேன் சார் என்று கூறினார்.