பிக்பாஸ் வீட்டில் இன்றைய எபிசோடில் கமல் போட்டியாளர் ஒவ்வொருவரையும் தனித் தனியாக அழைத்து பேசினார்.

 

அப்படி லாஸ்லியாவை கமல் தனியாக அழைத்து பேசிய போது, நீங்கள் இங்கு போட்டிக்காக வந்திருக்கிறீர்கள், பாசம், காதல் எல்லாவற்றையும் ஒதுக்கி வையுங்கள் என்று கூறினார்.

 

அப்போது லாஸ்லியா எனக்கு ஒரே விஷயத்திற்கு மட்டும் தான் உண்மை தெரிய வேண்டும் சார், அதற்கு உங்களால் பதில் சொல்ல முடியுமா என்று லாஸ்லியா கேட்டார்.

உடனே கமல் கேளுங்கள் முடிந்தால் சொல்கிறேன் என்று கூறினார், அப்போது லாஸ்லியா நான் இங்கு பலரிடம் பழகுகிறேன், ஒரு சிலருக்கு முக்கியத்துவம் தருகிறேன்.

 

ஆனால் அவர்கள் எங்களிடம் உண்மையாக இருக்கிறார்களா? இல்லையா? என்பது தெரியவில்லை, அதனால் நீங்கள் கொஞ்சம் ஹிண்ட்ஸ் கொடுத்தால் போதும் என்று லாஸ்லியா கூறிய போது, கமல் உடனே நான் பொதுவாகத் தான் கூறினேன், அனைவரிடம் ஜாக்கிரதையாக இருங்கள்.

 

இது ஒன்றும் சுற்றுலாத்தளம் இல்லை, போட்டித்தளம் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். அப்போது அரங்கத்தில் கைதட்டல் பறந்தது.