சேரன் தனது குருநாதர் கேஎஸ் ரவிக்குமாருடன் சேர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சேரன். இவர் இயக்கிய ஆட்டோகிராப், வெற்றி கொடிகட்டு, தவமாய் தவமிருந்து போன்ற திரைப்படங்கள் காலத்தை தாண்டி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன.

சேரன் பிக்பாஸ் சீசன் 3-ல் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார், அவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற வேண்டும் என ஒரு சாரார் பேசுவதை பார்க்க முடிகிறது.

சேரன் பிரபல இயக்குனர் கே.எஸ் ரவிக்குமாரிடம் பல படங்களில் துணை இயக்குனராக பணியாற்றியவர் ஆவார்.

அப்படி ரவிக்குமாருடன் சேரன் சேர்ந்து இருக்கும் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் டிரண்டாகி வருகிறது.