பிக்பாஸ் வீட்டில் இன்று யார் வெளியேறப்போகிறார் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

60 நாட்களை கடந்து பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. நடிகை கஸ்தூரியும், வனிதாவும் வீட்டிற்கு வந்த பின் நிகழ்ச்சி இன்னும் சூடுபிடித்துள்ளது. அவர்களின் வருகைக்கு பின் சாக்‌ஷி , மதுமிதா ஆகியோர் வெளியேறியுள்ளனர்.

இந்த வாரம் வெளியேறுபவர் பாட்டியலில் கஸ்தூரி, சாண்டி, முகேன் ஆகியோர் உள்ளனர். சேரன் வீட்டின் தலைவர் ஆகிவிட்டதால் அவர் வெளியேற மாட்டார். இதில், நடிகை கஸ்துரிக்கு மிகவும் குறைவான வாக்குகள் விழுந்திருப்பதாகவும், அவரே இந்த வாரம் வெளியேறுவார் என செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதற்கான பதில் இன்றைய நிகழ்ச்சியில் தெரிய வரும்.