பிக்பாஸ் வீட்டில் இருக்கும் லாஸ்லியாவுக்கு கமல்ஹாசன் அறிவுரை கூறும் வீடியோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் லாஸ்லியாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர். அவர் பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற அடுத்த நாளே ஓவியா போல லாஸ்லியா ஆர்மியும் தொடங்கப்பட்டது. ஆனால், கவினுடன் அவர் நெருக்கமாக பழகி வருகிறார். இது, காதலா நட்பா என்கிற குழப்பமும் அவரிடம் நீடித்து வருகிறது.

இந்நிலையில், ரகசிய அறையில் கமல்ஹாசனுடன் லாஸ்லியா அறிவுரை கேட்கிறார். அப்போது ‘இந்த வீட்டிற்குள் நீங்கள் வந்த போது யாரையும் தெரியாது அல்லவா. அதுபோலவே இருங்கள். இது போட்டி. சுற்றுலா அல்ல’ என அவருக்கு அறிவுரை கூறுவது போல கொஞ்சம் தலையிலும் கமல்ஹாசன் கொட்டு வைத்தார்.

இந்த காட்சிகள் கீழுள்ள புரமோ வீடியோவில் காட்டப்பட்டுள்ளது.