கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.

2 வருடங்களுக்கு முன்பே தொடங்கப்பட்ட ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ பல பிரச்சனைகள் காரணமாக வெளியாகவில்லை. இப்படத்தின் இயக்குனர் கௌதம் மேனன் நிதி நெருக்கடி செய்தியில் சிக்கியிருந்ததே காரணம் எனக் கூறப்படுகிறது. எனவே, இப்படம் வெளியாகும் என்கிற நம்பிக்கை தனுஷ் ரசிகர்களுக்கே போய்விட்டது. அதன்பின் அசுரன் படத்தின் படப்பிடிப்பையே தனுஷ் முடிவித்துவிட்டார்.

இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தில் தனுஷுக்கு அண்ணனாகவும், தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் 6ம் தேதி வெளியாகவுள்ளது.