கணவர் மற்றும் குழந்தைகளை கொன்று ஏரிக்கரையில் புதைத்த இளம்பெண்.. அதிர்ந்துபோன பொலிசார்..!

தமிழகத்தில் மனைவியே கணவன் மற்றும் குழந்தைகளை கொலை செய்து புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகேயுள்ள தாஜ்பூரா மந்தைவெளி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா(25). இவர் அதே பகுதியைச் சேர்ந்த தீபிகா என்ற இளம்பெண்ணை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்த தம்பதிக்கு, ஒரு வயதில் பிரனீஷ் என்ற ஆண் குழந்தை இருந்தது.

இந்நிலையில், தீபிகா தனது கணவர் மற்றும் குழந்தையைக் கடந்த 13-ம் தேதியில் இருந்து காணவில்லை என்று ஆற்காடு தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றுள்ளார்.

அப்போது, பொலிசாரின் கேள்விகளுக்கு தீபிகா முன்னுக்கு பின் முரனாக பதிலளித்துள்ளார். இதனால் தீபிகா மீது சந்தேகமடைந்த பொலிசார், கிடுக்குபிடி விசாரணையில் ஈடுபட்டனர்.

அதில், என் கணவரையும், குழந்தையையும் கொடூரமாகக் கொலை செய்து வீட்டின் அருகே உள்ள ஏரிக்கரையில் சடலங்களை குழிதோண்டிப் புதைத்துவிட்டேன் என்று அதிர்ச்சித் தகவலைக் கூறினார்.

உடனடியாக போலீஸார், தீபிகாவின் வீட்டுக்குச் சென்றனர். ஏரியைப் பார்வையிட்டு அக்கம், பக்கம் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தினர். இரவு 11 மணியானதால் சடலங்களைத் தேடும் பணியை தொடங்கவில்லை.

இதையடுத்து, இன்று காலையிலிருந்து ஏரிக் கரையில் பள்ளம் தோண்டி உடல்களைத் தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார்கள். கணவர் மற்றும் குழந்தையைக் கொலை செய்ததற்கான காரணம் குறித்து தீபிகாவிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.