இறப்பதற்கு முன்பு அஜித் வீட்டிற்கு சென்ற கிரேசி மோகன்! அவருக்கு அஜித் கொடுத்த கிப்ட் என்ன தெரியுமா? அவரே நெகிழ்ச்சியாக கூறியது

பிரபல நடிகர் கிரேசி மோகன் அவர்களின் திடீர் மரணம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Image result for crazy mohan death

இறப்பதற்கு முன்பு கிரேசி மோகன் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் அஜித் பற்றி நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். “நான் வெளியில் சென்றால் பலரும் என்னிடம் ஒரு குறிப்பிட்ட நடிகர் நம்பரை தான் கேட்கிறார்கள். அது ரஜினியோ, கமலோ அல்ல… அஜித் பற்றித்தான் கேட்கிறார்கள். அவருக்கு இவ்வளவு பெரிய ரசிகர் கூட்டம் இருப்பதாய் பார்த்து வியந்தேன். அஜித்தின் வீட்டுக்கு நான் ஒருமுறை சென்றிருந்தேன். அப்போது அவர் வீட்டில் பெரிய சாய்பாபா போட்டோ இருப்பதை பார்த்து வியந்தேன்.”

“நான் சாய் பக்தன் என்பதால் அதுபோல ஒரு காபி கிடைக்குமா என அஜித்திடம் கேட்டேன். சில நாட்கள் கழித்து அதுபோல ஒன்று என் வீடு தேடி வந்தது. நான் எதிர்பார்க்கவே இல்லை” என கிரேசி மோகன் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.