ஆளே மாறிப் போன கோலங்கள் சீரியலில் நடிகை சந்திரா? இப்போ எப்படி இருக்காரு பாருங்க

பிரபலமான விஜய் ரிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காதலிக்க நேரமில்லை என்ற தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நடிகை சந்திரா லக்ஷ்மன். இவர் தமிழில் ஸ்ரீகாந்த் நடிப்பில் லக்ஷ்மன். படத்தில் ஸ்ரீகாந்திற்கு தங்கையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் தமிழில் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வந்தார்.

இவர் என்ன தான் படத்தில் நடித்திருந்தாலும் இவருக்கு புகழை பெற்றுக்கொடுத்தது சீரியல் தான், தமிழில் கோலங்கள், துளசி, பாசமலர், காதலிக்க நேரமில்லை ஆகிய தொடர்களில் நடித்திருந்தார், அதுமட்டுமில்லாமல் சில மலையாள சீரியல்களிலும் நடித்துள்ளார்.

இவர் கடைசியாக நடித்த திரைப்படம் தில்லாலங்கடி, தற்போது இவர் மலையாளத்தில் ஒன்னும் ஒன்னும் மூனு என்ற தொடரில் நடித்து வருகிறார், இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தில் பத்து வருடத்திற்கு முன்பு எப்படி இருந்தாரோ அதேபோல் தான் சந்திரா இருக்கிறார். மேலும் இவர் தமிழில் விரைவில் சீரியலில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.