அவரை பார்க்கனும்… குழந்தை ஏங்குது: பிக்பாஸ் சரவணன் மனைவி உருக்கம்

பிக்பாஸ் வீட்டில் அனைவருடனும் அன்பாகி பழகி வருகிறார் நடிகர் சரவணன்.

இந்நிலையில் சரவணன் மனைவி சூரியா அளித்துள்ள பேட்டியில், அவரை எனக்கு பார்க்கனும் போல இருக்கு.

சரவணன் பிக்பாஸில் ஜெயித்தால் சந்தோஷம், ஆனாலும் அவர் வீட்டுக்கு வர வேண்டும் என நினைத்தாலும் மகிழ்ச்சி தான்.

அவருக்கு அதிகமாக கோபம் வரும், ஆனால் பிக்பாஸ் வீட்டில் அவர் தனது கோபத்தை அதிகமாக காட்டவில்லை.

அவர் சமீபத்தில் தான் அப்பா ஆனார், அதனால் குழந்தையை பார்க்க வேண்டும் என அவர் நினைக்கிறார்.

அதே போல குழந்தையும் அப்பா, அப்பா என ஏங்குகிறது.

அவர் சினிமா வாய்ப்பு இல்லாமல் கஷ்டபட்ட காலத்தில் நான் தான் அவருக்கு அம்மாவாக, அப்பாவாக, மனைவியாக என எல்லாமுமாக இருந்தேன்.

பிக்பாஸில் எனக்கு சாண்டியை பிடிக்கும், வனிதா அனைவரையும் அடக்க வேண்டும் என நினைக்கிறார், அது அவர் குரலால் ஏற்படும் பிரச்சனையா என எனக்கு தெரியவில்லை.

லோஸ்லியாவை எனக்கு பிடிக்கும், கவினும், சாக்‌ஷியும் காதலிப்பது போல தெரிவது நாடகம் போல உள்ளது என கூறியுள்ளார்